இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர், ‘காடுன்னு ஒன்னு இருந்தா, சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்கு போகும்’ என கமல்ஹாசனின் கணீர் குரலில் தொடங்குகிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம். ஜூன் 3-ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நேற்று படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் மிக பிரம்மாண்டமாக வெளியீடு செய்யப்பட்டது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடல் ‘பத்தல பத்தல’ வெளியானது. இந்த பாடலை நடிகர் கமல்ஹாசனே எழுதி, பாடியும் இருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. ஆனால், பல்வேறு தரப்பு மக்களிடையே கடும் விமர்சனத்தையும் பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நேற்று இரவு ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில், ‘காடுன்னு ஒன்னு இருந்தா, சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்கு போகும்’ என்ற வசனம் வரும் போது நடிகர் விஜய் சேதுபதி உட்பட 3 முக்கிய நடிகர்கள் வருகிறார்கள். ‘மான் தப்பிக்க பாக்கும்’ ஆனா! அதுக்குள்ள அஸ்தமனம் ஆகிடுச்சுனா… காலையில விடியல பாக்கப் போவது யாரு என்பதை இயற்கை தான் முடிவு செய்யும் என்ற டயலாக்குகள் வரும்போது கல்லறை காட்டப்படுகிறது.
ஆனா, இந்த காட்டில்.., யாரு? எப்போ? எங்க? விடியல பக்கப் போறாங்க என்பதை முடிவு செய்வது இயற்கை இல்ல… நான் தான்! என ரத்தம் சொட்ட சொட்ட கமல்ஹாசன் வருகிறார். அதேசமயம், விஜய் சேதுபதியும் தோன்றுகிறார். அதில், கிழிந்த உடம்போடு ரத்தம் சொட்ட சொட்ட வரும் விஜய் சேதுபதி, அடுத்த சாட்டில், மாஸ் லுக்கில் துப்பாக்கியுடன் தனித்துவமான டயலாக்குகளோடு மிரட்டுகிறார்.
அண்மைச் செய்தி: ‘அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் பேச்சு’
தொடர்ந்து, உங்களுக்கும் டெரரிஸ்ட்களுக்கும் என்ன வித்தியாசம்னு கேட்கப்படுகிறது.., அப்போது, ‘இந்த மாதிரி நேரத்துல, வீரர்கள் சொல்லுற வார்த்தை என்ன தெரியுமா’ என கமல்ஹாசன் கேட்டுக்கொண்டே துப்பாக்கியால் சுடும் காட்சி மிரள வைக்கிறது.
விஜய் சேதுபதி மற்றும் கமல்ஹாசன் அதிரடியான சண்டையில் ஈடுபடுவதாக காட்டப்படுகிறது.., ஆனால், கமல்ஹாசன் ஆரம்பத்தில் சொல்லும் மான் யார்? சிறுத்தை யார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.., ஓ, என்னவோ! இறுதியில், இருவரும் உக்கிரமான தோற்றத்தில் தோன்றுகின்றனர்.., ‘விக்ரம்’ என உரத்த குரலில் கத்தி கத்தி கூப்பிடுகிறார் கமல்… ஜூன் 3-ஆம் தேதி பார்ப்போம் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதை.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.