சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவி எண் அறிவிப்பு…!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியின் படி பெண்கள் மற்றும் குழுந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இந்த படையின் ஐஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினை கடந்த 9 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் (SSF) செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், அவசர அழைப்புகளுக்கு விரைவான நடவடிக்கையினை மேற்கொள்ளவும், 1091 என்ற உதவி எண் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான பிரத்யேக உதவி எண்ணாக அறிவிக்கப்பட்டு. 112 அவசர கால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர காலங்களில் தகவல் பரிமாற்றம் வேகமாக நடைபெறுவதுடன், சம்பவ இடத்திற்கு உடனடி காவல் உதவி வழங்கப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் உதவியை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில், 1091 என்ற ஒரே உதவி எண் மூலம் நேரடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1091 உதவி எண்ணிற்கு வரும் ஒவ்வொரு அவசர அழைப்பிற்கும் உடனடி கவனம் செலுத்தும் வகையில், மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் (State Police Master Control Room) சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக கூடுதல் பிரத்யேக அழைப்பு ஏற்கும் வசதிகள் (Call Attending Desks) அமைக்கப்பட்டுள்ளன. இம்மையம் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு, பயிற்சி பெற்ற காவலர்களால் கண்காணிக்கப்படுகின்றது. இக்கட்டுப்பாட்டறை புகார்களைப் பெற்று, உடனடி நடவடிக்கையை ஒருங்கிணைக்கின்றது.

1091 உதவி எண்ணிற்கு அழைப்புவந்தவுடன், அந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும். அருகிலுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அல்லது ரோந்து குழுவிற்கும் அனுப்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் காவலர்கள் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவியை வழங்கி, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை தொடர் உறுதிப்படுத்தப்படுகிறது. கண்காணிப்பின் மூலமாக

1091 உதவி எண்ணை 112 அவசர கால உதவி சேவையுடன் ஒருங்கிணைத்ததன் மூலம், தகவல் பரிமாற்றம் வேகமாக நடைபெறுவதோடு. ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டு, அவசர காலங்களில் இன்னும் விரைவான காவல் உதவி வழங்கப்படுகின்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் தொந்தரவு, வன்முறை, குடும்ப வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் (Stalking). மிரட்டல் அல்லது உடனடி காவல் உதவி தேவைப்படும் எந்தவொரு சூழ்நிலையிலும் தயக்கமின்றி 1091 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சூழலை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உருவாக்குவதற்காக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் மற்றும் அதன்பிரத்யேக 1091 உதவி எண் மூலம்தமிழ்நாடு காவல்துறை தனது முழுமையான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.