ஹெலிகாப்டர் விபத்து; வீடியோ எடுத்தவரின் பிரத்யேக பேட்டி

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன் வீடியோ எடுத்தவர், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன் வீடியோ எடுத்தவர், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக, பிபின் ராவத் உட்பட ராணுவ வீரர்கள் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர், மேகமூட்டத்திற்குள் சிக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளாகும் முன் மேக மூட்டத்திற்கு நடுவே பறந்த ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நொடி காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது பனிமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. இந்த ஹெலிகாப்டர் எம்.ஐ.17வி5 வகை என்பதால் பனிமூட்டத் திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இவ்விபத்து நிகழ்வதற்கு முன் ஹெலிகாப்டர் வானில் பறந்த வீடியோவை பதிவு செய்த, நாசர் என்பவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது, காட்டேரி பகுதிக்கு அருகே புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்ததாகவும்,

ஹெலிகாப்டர் ஒன்று, வானத்தில் பறப்பதை கண்டு, அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். திடீரென அந்த ஹெலிகாப்டர், பனி மூட்டத்திற்குள் நுழைந்து, மரத்தின்மீது மோதி எரிந்து கொண்டே கீழே விழுந்ததாகவும், பெரும் சத்தம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.