மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை; 13வது நாளாக மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடரச்சி மலைப் பகுதியை ஒட்டி மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது.  இங்கு…

தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 13வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடரச்சி மலைப் பகுதியை ஒட்டி மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது.  இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் விழுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக மணிமுத்தாறு அருவி பகுதியில் கனமழை பெய்துள்ளது.

இதையும் படியுங்கள்:“குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு!

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இன்றும் அருவியில் நீர்வரத்து குறையாததையடுத்து 13-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் அருவியை பார்வையிடவும் அம்பாசமுத்திரம் வனத்துறையினர் தடை விதித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.