தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால்…

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னையில் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தேக்கத்தை தடுக்க அரசு சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.

 

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை நீலகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையானது பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால், அரியலூர் ,பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழையானது பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.