நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது மகள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகை ரம்பா இலங்கை தமிழரான இந்திரகுமா பத்மநாதன் என்பதை திருமணம் செய்த பிறக குடும்பத்துடன் தற்போது கனடா நாட்டின் தலைநகர் டொரோண்டோவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நடிகை ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த அவரது கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் குழந்தைகளும் மற்றும் குழந்தை பராமரிப்பாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டள்ளது. இது தொடர்பாக நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தங்கள் கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில், எனது மகள் ஷாஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது கெட்ட நாள்.. கெட்ட நேரம் என்றும் அனைவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் அவரது மகள் நலமுடன் விரைவில் மீண்டு வருவார் எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்








