வெனிசுலா நாட்டில் பெய்து கனமழை காரணமாக நிலச்சரிவு சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அங்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு இழப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அரகுவா மத்திய மாகாணத்தில் திடீரென நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் சிக்கி கொண்டனர். அதில், 22 பேர் உயிரிழந்தனர். 50 பேரை காணவில்லை. இதனால் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரகால நிலையை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு முகமைகளை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, மீட்பு மற்றும் நிவாரண பணியில் தேசிய பேராபத்து மேலாண் அமைப்பு மற்றும் காவல் அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
வெனிசுலாவில் பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக துணை நிற்கும் வகையில் நாட்டில் 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அதிபர் மதுரோ அறிவித்து உள்ளார். மாயமான 50 பேரின் நிலை என்ன மேலும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்து பாதுகாப்பு குழு கண்காணித்து வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்