சென்னையில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதால், பயணிகளின் நீண்ட வருட கோரிக்கை நிறைவே உள்ளது.
சென்னையில் இயங்கக்கூடிய புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்த அரசும் ஆலோசனை நடத்தி வந்தது. ஆனால் சாதாரண பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் எனவும் அதற்காக தென்னக ரயில்வே உடன் கூட்டு சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருவதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயிலை இயக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. தினசரி பல லட்சம் பேர் பயணிக்கும் புறநகர் ரயில்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒப்பந்தப்புள்ளி குறித்து http://eprocure.gov.in/eprocure/app/ என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புறநகர் ரயில்களில் குளிர்சாதன வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுவதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.








