சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, தி-நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், வளசரவாக்கம், மைலாப்பூர், பாலவாக்கம், ராயப்பேட்டை,…

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

குறிப்பாக எழும்பூர், சென்னை சென்ட்ரல், கிண்டி, தி-நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், அசோக்நகர், வளசரவாக்கம், மைலாப்பூர், பாலவாக்கம், ராயப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. காலையிலும் சில பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சில மாவட் டங்களில் இன்று முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் ரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.