ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் : விக்கிரம ராஜா

ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தில் இணைக்கும் நிகழ்ச்சி…

ஆன்லைன் வியாபாரம் ஒரு மோசடி தொழில் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வியாபாரிகள் சங்கங்களை ஒன்றிணைத்து தமிழ்நாடு வணிகர் சங்கத்தில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாகவும், ஜிஎஸ்டி வரி உயர்ந்தால், மேலும் விலை உயரும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜிஎஸ்டி வரி உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தமிழ்நாட்டில், வணிகர் சங்கங்களில் பேரமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆன்லைன் வணிகம் என்பது வெளிநாட்டு வணிகம் என்றும், அதில் வெளிநாட்டு சக்திகள் உள்ளே நுழைந்து இங்கு உள்ள வணிகர்களை சுரண்டிக் கொண்டிருப்பதாவும் அவர் சாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.