#WeatherUpdate | சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

சென்னையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில்…

Chennai Meteorological Department ,heavy rain , Tamil Nadu

சென்னையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கிண்டி, பல்லாவரம், சாலிகிராமம், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோபாலபுரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.