கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் மலை ரயில் சேலை இயங்கியது.
இதையும் படியுங்கள்: வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி இடையிலான ரயில் வழித்தடம் சீரமைப்பு! ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!
இந்த நிலையில், கனமழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உதகை மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







