சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை

சென்னையில் ஆவடி, அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை…

சென்னையில் ஆவடி, அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, போரூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் வரும் நாளை மறுநாள் முதல் வரும் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.