ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூடலூர் பகுதியில் இந்தியா ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்வதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற…

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூடலூர்
பகுதியில் இந்தியா ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்வதை முன்னிட்டு பலத்த
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பாஜக அரசுக்கு
எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த இந்திய ஒற்றுமை நடைபயணம், நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக, தமிழக கேரள எல்லைப் பகுதியான கூடலூரில் ராகுல் காந்தி இன்று நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆமைக்குளம் பகுதியில் துவங்கும் இந்த நடைபயணம் கோழி பாலம் வழியாக கூடலூர் பகுதியை வந்தடைகிறது. வரும் வழியில் ராகுல் காந்திக்கு, ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலாச்சார நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

 

பின்னர் கூடலூர் பகுதியில் நீண்ட கால பிரச்சனையான நிலப் பிரச்சனை மற்றும் டேண்டீ தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கூடலூர் நகரப் பகுதியில் இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.