விசாரணையின்போது பெண்ணை தாக்க முயன்ற எஸ்ஐ பணியிடமாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் பெண்ணின் வீட்டிற்கு விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் முரளிதரன் அந்த பெண்ணை தாக்க எத்தணித்து செல்போணை பறிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில்  சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.யை நாகர்கோவில்…

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் பெண்ணின் வீட்டிற்கு விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் முரளிதரன் அந்த பெண்ணை தாக்க எத்தணித்து செல்போணை பறிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில்  சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.யை நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்து எஸ்பி ஹரி கிரண் பிரசாத் உத்தரவு பிறப்பித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு நடுவூர்கரை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ்.
இவரது மனைவி லில்லி ஜனட். இவர் கடந்த 14-ம் தேதி மண்டைக்காடு காவல் நிலையத்தில் பக்கத்து வீட்டை சார்ந்த ஐயா துரை சில நபர்களுடன் சேர்ந்து அரசின் உரிய அனுமதியின்றி கோயில் ஒன்றை கட்ட முயற்ச்சிப்பதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு 24-ம் தேதி அன்று மண்டைக்காடு காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் லில்லி ஜனட் வீட்டிற்கு
சென்றுள்ளார். அப்போது லில்லி ஜெனட் போலீசார் வந்த தகவலை தனது கணவருக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் முரளிதரன் லில்லி ஜனட்டை அடிக்க
எத்தணித்ததோடு அவரது செல்போணையும் பறிக்க முயன்றுள்ளார்.

இந்தக் காட்சிகள் வெளியான நிலையில் எஸ்ஐ முரளிதரனை நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்து எஸ் பி ஹரி கிரண் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.