முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ்-ஐ வரவேற்க மதுரை விமான நிலைய வளாகத்தில் அனுமதியின்றி மேடை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மதுரை விமான நிலையத்தில்
அனுமதியின்றி அமைக்கப்பட்ட திடீர் மேடையால் சர்ச்சை எழுந்தது.

உச்ச கட்ட பாதுகாப்பு வளைத்தில் உள்ள மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் செய்வதறியாது அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினரின் செயல்பாடுகளால் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை வரவேற்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையிலான அதிமுகவினர் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அப்போது விமான விமான நிலையம் பயணிகள் வருகை வாயிலில் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் எடப்பாடி பழனிசாமி வரவேற்க ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் திடீர் மேடை அமைத்து தொண்டர்களுடன் வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவினர் விமான நிலையத்தில் முன் அனுமதி பெறாமல் மேடை அமைக்கப்பட்டது
பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் வரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்க அந்தந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரடியாக நின்று வரவேற்று அனுப்பி விடுவது வழக்கம்.


ஆனால் முதல் முறையாக அதிமுகவினர் மதுரை விமான நிலையத்தில் சர்ச்சைக்குரிய
வகையில் திடீர் மேடை அமைத்து வரவேற்பளித்தனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதற்காக குறைந்த அளவு போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மேடை அமைத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதால் அதிகளவு அதிமுக தொண்டர்கள் கூடினர். இதனால் காவல்துறையினர் கட்டுப்படுத்த முடியாமல் திக்கு முக்காடினர்.

ஒரே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமானத்தில் வரும்
சூழ்நிலையில் இதுபோன்ற அரசியல் கட்சிகள் மேடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு
பிரச்சினை ஏற்பட வழி வகுக்கும்.

இதுகுறித்து அவனியாபுரம் காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது மதுரை விமான நிலையத்தில் இருந்து புகார் வரும் பட்சத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என
தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துமா? எய்ம்ஸ் இயக்குனர் பதில்!

EZHILARASAN D

அசைவ பிரியர்களுக்கு சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம்

Halley Karthik

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள்! – கனிமொழி

Nandhakumar