கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் 150 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளையும், அதே வளாகத்தில் எஃப் பிளாக்கில் 100 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளையும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டுமே அரசு மூலம் ரெம்டெசிவர் மருந்து வினியோகம் செய்யப்படுவதாக கூறினார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து அவசியம் இல்லை என்று கூறிய அவர், நோய் பாதித்த 30 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படும் என விளக்கமளித்தார். தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல் அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவர் மருந்தை பரிந்துரை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.