திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் (54),
இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நடிகர் சூர்யா நடித்த அயன், மாற்றான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார். 1995ஆம் ஆண்டில் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை இவர் பெற்றார்.
2008ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படதிற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருதையும் கே.வி. ஆனந்த் பெற்றார்.







