“என் நடிப்பை பிடிக்காது என்று கூறுவார்” – இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி..!

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிராஜாவின் திறமை, சாதனைகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். திரைத்துறையில் நிறைய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர். திரையுலகை வாழ வைத்தவர்.

இயக்குனர், தயாரிப்பாளர் என யாருக்கு பிரச்சினை வந்தாலும் முதலில் குரல் கொடுத்து போராடியவர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் பெயரை மறக்க மாட்டார்கள். என்றென்றும் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.

தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. பிடித்தால் பிடித்திருக்கிறது இல்லை என்றால் இல்லை என்று மனதில் இருப்பதை சொல்பவர். உன்னை எனக்குப் பிடிக்கும். உன் நடிப்பு எனக்கு பிடிக்காது என்று என்னை பற்றி விமர்சனம் செய்வார். அவரோடு இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப் போன்று வெளிப்படையாக பேசக்கூடியவர்கள் யாரும் இல்லை.

எம்ஜிஆர் கலைஞர் சிவாஜி என எல்லோருக்கும் நட்புடன் இருந்தவர். அன்போடு இருந்தவர். அவர் குணமாகி விடுவார் என்று தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள். அவர் என்றென்றும் நினைவில் இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.