2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரான நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 2019 , 2024 என அடுத்தடுத்த பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக அவர் தொடர்கிறார்.
நேற்றுடன் (ஜூன்.9) இந்தியாவின் பிரதமராக மோடி 12 ஆண்டுகளை நிறைவு செய்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி நீண்டகாலமாக பதவியில் இருக்கும் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்கிற சாதனையை படைத்துள்ளார். இதன் முலம் அவர் முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமராக 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பதவியேற்றார் மோடி. அதன்படி அவர் இந்திய பிரதமராக இன்றுடன் (10/06/2026) 4,399 நாட்களை நிறைவு செய்கிறார்.
இந்தியாவின் பிரதமராக முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952-ன் போது ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு மே 13 அன்று பதவியேற்ற அவர் மே 27, 1964-ஆம் ஆண்டு இறக்கும் வரை மொத்தம் 4,398 நாட்கள் அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
1947 முதல் 1952 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய நேருவின் ஆட்சிகாலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இதன் மூலம் ஜவகர்லால் நேருவின் 62 ஆண்டுகால சாதனையை மோடி முறியடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




