“கட்சிக்குள் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் இவர்தான் காரணம்… பாமகவை அழிக்க வந்த துரோகி” – நிர்வாகிகளிடையே ஆதங்கத்துடன் பேசிய அன்புமணி ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உட்கட்சி பூசல் பிரச்சனை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் கட்சிக்குள் நடக்கக்கூடிய அனைத்து பிரச்னைகளுக்கும் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தான் காரணம் என, பனையூரில் கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே அன்புமணி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், கட்சிக்குள் நடக்கக்கூடிய பிரச்னைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். இதேபோல் அன்பழகன் மற்றும் அவருடன் மற்றொரு நபர் உடன் இருந்து கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், மாவட்ட செயலாளர்கள் நியமனத்திற்கு மூன்று முதல் ஐந்து லட்சம் வரை பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.