இவர் தான் லியோ படத்தின் மெயின் வில்லன்; இணையத்தில் கசிந்து வரும் புதிய தகவல்கள்

லியோ படத்தின் மெயின் வில்லன் யார் என்பது குறித்து இணையத்தில் புதிய தகவல்கள்  கசிந்து வருகின்றன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில்…

லியோ படத்தின் மெயின் வில்லன் யார் என்பது குறித்து இணையத்தில் புதிய தகவல்கள்  கசிந்து வருகின்றன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்த படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோ  ப்ளடி ஸ்வீட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதனை அதிகப்படுத்தும் விதமாக லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகி பட்டையை கிளப்பியது. ப்ரோமோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலவும், அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வருவது போலவும் காட்சிகள் இருந்தன.

மேலும், லியோ ப்ரொமோ வீடியோ தற்போது 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்  சென்னையில் நடக்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் விஜயுடன், சஞ்ஜய் தத், மன்சூர் அலிகான் ஆகியோர் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து அர்ஜுன் அல்லது சஞ்சய் தத் ஆகியோரில் ஒருவர் தான் மெயின் வில்லனாக இருப்பார்கள் என இணையத்தில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் கௌதம் மேனன், மிஸ்கின் ஆகியோரின் பகுதி முடிவடைந்ததை அடுத்து அவர்கள் கண்டிப்பாக மெயின் வில்லனாக இருக்கமாட்டார்கள் எனவும் சஞ்சய் தத் மெயின் வில்லனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும்  ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

குறிப்பாக  சஞ்சய் தத் காஷ்மீர் படப்பிடிப்பிலும், சென்னையில் நடக்கும் படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள இருக்கின்றார். எனவே அவர் தான் மெயின் வில்லனாக இருப்பார் எனவும் இல்லை  சூர்யா தான் மெயின் வில்லனாக இருப்பார் எனவும் ரசிகர்கள் இருவேறு  கருத்துகளை முன் வைத்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் மேலாக ரசிகர்களின் இந்த அனைத்து கணிப்புகளையும்  தாண்டி  லோகேஷ் கனகராஜ் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை கண்டிப்பாக லியோ படத்தில் வைத்திருப்பார் எனவும் ரசிகர்களின் கூறி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.