உலகளவில் ரூ. 1000 கோடி வசூலை கடந்த துரந்தர் 2…!

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த திரைப்படம் ’துரந்தர்’.  ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் துரந்தர் ; தி ரிவெஞ்ச் என்ற பெயரில் கடந்த 19 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ]

வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் துரந்தர் 2 திரைப்படமானது உலகளவில் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரின் படி துரந்தர் 2 திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் 1088 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக குறிப்படப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.