சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: காதலன், நண்பன் கைது

கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை அருகே 17 வயது சிறுமியை காதலித்த 18 வயது சிறுவன் மற்றும் அவனின் நண்பர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை அடுத்த…

கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை அருகே 17 வயது சிறுமியை காதலித்த 18 வயது சிறுவன் மற்றும் அவனின் நண்பர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள சிறுமி அதன்பின் அதே பகுதியில் உள்ள வலை
கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்ததும் இவர் அதே பகுதியில்
உள்ள கோவிலுக்குச் சென்று தினமும் சாமி கும்பிடுவது வழக்கம்.

சிறுமி சாமி கும்பிட வரும்போது பழவிளை பகுதியைச் சேர்ந்த பைக் ரைடர் ஸ்ரீநிஷாந்த் (18) தினமும் சிறுமியை காதலிக்க வற்புறுத்தி பின் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு ஸ்ரீநிஷாந்தின் நண்பன் ஐயப்பன் காதலுக்கு உதவியதாக கூறப்படுகிறது. பின்
சிறுமியும், ஸ்ரீநிஷாந்தும் காதலித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: களைகட்டிய போளூர் சந்தை; ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்ரீநிஷாந்தும், அவனது நண்பன் ஐயப்பனும் இருசக்கர வாகனத்தில் சிறுமியை காண வந்திருக்கின்றனர். சிறுமியை பார்த்ததும் ஸ்ரீநிஷாந் நான் உன்னை கல்யாணம் செய்ய போகிறேன். நீ வண்டியில் ஏறு என கூறி உள்ளான். முதலில் மறுப்பு தெரிவித்த சிறுமி இரண்டாவதாக வண்டியில் ஏறி உள்ளார். வண்டியில் ஸ்ரீநிஷாந்,
சிறுமி மற்றும் அவனது நண்பன் ஐயப்பன் என 1 வண்டியில் 3 பேரும் ஆள் இல்லாத
வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அப்போது முதலில் சிறுமியை ஸ்ரீநிஷாந் பாலியல்
வன்கொடுமை செய்திருக்கிறான்.

நடந்த விஷயத்தை வெளியே சொல்லுவேன் என ஸ்ரீநிஷாந்தின் நண்பன் ஐயப்பன் மிரட்ட அவனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் மாறி மாறி இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விடியற்காலையில் ஸ்ரீநிஷாந்தின் வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்றிருக்கின்றனர். காலையில் நிஷாந்தின் உறவினர்கள் சிறுமியை அவரது வீட்டிற்கு கொண்டு விட்டிருக்கின்றனர்.

சிறுமி நடந்த விஷயத்தை எல்லாம் தனது அம்மாவிடம் கூறியதையடுத்து, அவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீநிஷாந்த் மற்றும் ஐயப்பன் மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.