நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர் ‘யூத்’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
அவரே இயக்கி நடித்துள்ள இப்படத்தை என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
கென் கருணாஸ் உடன் இப்படத்தில் சிறை புகழ் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ, தேவ தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.
பள்ளி பருவ வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகியுள்ள இப்படம் விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ’யூத்’ படக்குழுவை நடிகர் சிலம்பரசன் வாழ்த்தியுள்ளார்.








