சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?-அமைச்சர் மெய்யநாதன் பதில்

சர்வதேச மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. அதனை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.…

சர்வதேச மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. அதனை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

செப்டம்பர் 12-18 வரை நடைபெற உள்ள சர்வதேச மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிக்காக மைதானம் தயார் செய்யபட்டுள்ளது. அதை ஆய்வு செய்து வந்தோம். 60 % பணிகள் முடிந்துள்ளது.

செப்டம்பர் 8க்குள்  மைதானம் முழுமையாக தயாராகிவிடும். நெற்றியில் வெற்றி திலகமிட்டு வீரர்களை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். செஸ் போட்டிக்கு மாணவர்களை அனுமதித்தது போல் இதற்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படுவார்கள்.

75 வீராங்கனைகள் வருகிறார்கள். உடன் பயிற்சியாளர்கள் டென்னிஸ் சங்கம் சார்ந்தவர்கள் வருவார்கள். தமிழக கலாசார பண்பாட்டின்படி வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் மெய்யநாதன்.

செஸ் ஒலிம்பியாட் போல் தொடக்க விழா ஏதேனும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:

போட்டிக்கு எந்த தொடக்க விழா ஏற்பாடும் இல்லை. 7 , 8 ஆம் தேதிகளில் வீரர்கள் வர இருக்கிறார்கள். இருக்கைகள் மோசமாக இருப்பதை மாற்றி கொண்டிருக்கிறோம்.

அரசு தனியார் பள்ளிகளில் ஆர்வத்துடன் டென்னிஸ் விளையாடும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்கள் போட்டியை காண அனுமதிக்கபடுவார்கள்.

எந்த விளையாட்டாக இருந்தாலும் அரசு சார்பில் நடத்தும் விளையாட்டாக இருந்தால் பயணச் செலவுகள் போன்றவை தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியம் சார்பில் ஏற்றுகொள்ளப்படும். தனியார் அமைப்பு சார்பில் நடக்கும் போட்டிகளுக்கு அரசு சார்பில் நிதி வழங்க சட்டத்தில் இடம் இல்லை.

இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் அடுத்தகட்டமாக விளையாட்டு துறையில் அதிக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார் முதலமைச்சர்.

மேலும் அனைத்து கிராமப் பகுதிகளில் மாநகராட்சி பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் உருவாக்க வேண்டும். இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் சென்னை என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.