ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்ககை நடைபெற்று வரும் நிலையில், பாஜக – காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தற்போது 11 மணி நிலவரப்படி, ஹரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதனால் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஹரியானா
பாஜக – 49
காங்கிரஸ் – 34
இந்திய தேசிய லோக் தளம் – 3
மற்றவை – 4








