அவசியமில்லாமல் ஸ்டீராய்டுகளை பயன்படுத்த வேண்டாம்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

அவசியமில்லாமல் ஸ்டீராய்டுகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சப்தர்ஜங்க் மருத்துவமனையில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்…

அவசியமில்லாமல் ஸ்டீராய்டுகளை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி சப்தர்ஜங்க் மருத்துவமனையில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய அவர், மருத்துவமனைகளை நவீனபடுத்துவத்துவது கொரோனா தொற்று சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சமீபகாலமாக மக்கள் அதிக அளவில் ஸ்டீராய்டுகளை உட்கொள்வதை காண முடிகிறது.
குறிப்பாக இந்த ஸ்டீராய்டுகளை, *ஹைப்போக்சிக்” (Hypoxic) எனும் உடலில் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதுவும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறிதளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது மக்கள் அதிக அளவில் அதை மருத்துவ ஆலோசனையின்றி எடுத்து வருகின்றனர், அப்படி எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும்.மருத்துவர் ஆலோசனை இன்றி ஸ்டீராய்டுகளை உட்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.