போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் பலி!

உத்தர பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம், பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த திலீப் கோரி, பிரதீப் கோரி, சித்தநாத் ஆகிய மூவரும்…

உத்தர பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட போலி மதுபானத்தை அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம், பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த திலீப் கோரி, பிரதீப் கோரி, சித்தநாத் ஆகிய மூவரும் இரண்டு நாட்களுக்கு முன் போலி மதுபானத்தை வாங்கி அருந்தியுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மற்றும் நெஞ்சு வழி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமானதால், சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, அவர்களின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமான போலி மதுபானம் விற்பனை வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக அப்பகுதியின் காவல் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் கவிந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.