பொன்னியின் செல்வனில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி! – பூங்குழலி

பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆம் பாகத்தில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய்,…

பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆம் பாகத்தில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, நடிகைகள் த்ரிஷா, ஐஷ்வர்யா லட்சுமி, ஷோபிதா ஆகிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “எனக்கு ஸ்கூல் நியாபகம் வந்தது. ஐஸ்வர்யா லட்சுமி என்று பெயர் வைத்ததால் முதலில் அழைப்பார்கள். அதுபோல இப்போதும் முதலில். பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2ல் இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.