தமிழ்நாடு முழுவதும் தைப் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளை களைகட்டுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.







