“தேசிய விண்வெளி தின வாழ்த்துக்கள்” – பிரதமர் நரேந்திர மோடி பதிவு!

பிரதமர் நரேந்திர மோடி தேசிய விண்வெளி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ம் தேதி இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. இந்தத் தேதி அதிகாரபூர்வமாக ‘தேசிய விண்வெளி தினமாக’ அறிவிக்கப்பட்டது. அதேபோல ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தேசிய விண்வெளி தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தேசிய விண்வெளி தின வாழ்த்துக்கள்! இந்தியாவின் விண்வெளிப் பயணம் நமது உறுதிப்பாடு, புதுமை மற்றும் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் நமது விஞ்ஞானிகளின் திறமையைப் பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.