“இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்” – நயினார் நாகேந்திரன்!

உங்கள் கடின உழைப்பே சமூகத்தின் முதுகெலும்பாக இருந்து முன்னேற்றத்தை சாத்தியமாக்குகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“உலகை வாழ்வதற்கு இன்னும் சிறந்த இடமாக மாற்றத் தங்கள் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செலுத்தி வரும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் என் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்கள்! உங்கள் கடின உழைப்பே சமூகத்தின் முதுகெலும்பாக இருந்து முன்னேற்றத்தை சாத்தியமாக்குகிறது.

உங்கள் ஒவ்வொரு முயற்சியும், வியர்வைத் துளியும் நாளைய தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குகிறது. உழைப்பின் மதிப்பை உயர்த்தும் இந்த நாளில், அவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதையும் நன்றியும் செலுத்துவோம்.

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.