“அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்” – அண்ணாமலை!

பெண்களின் பாதுகாப்பு, கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்குத் துணை நிற்போம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “குடும்பத்தையும், சமூகத்தையும், நாட்டையும் முன்னேற்றும் அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், எனது இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள் சக்தி தான் சமூகத்தின் அடித்தளம். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் பெண்களின் பங்கு அளப்பரியது.

பெண் சக்தி உயர்ந்தால் தான் சமூகம் உயர்ந்ததாகும். பெண்கள் பாதுகாப்பாகவும், சுயமரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யும் சமூகத்தை உருவாக்குவோம். பெண்களின் பாதுகாப்பு, கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்குத் துணை நிற்போம்.

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.