“என்ஞாயி எஞ்ஞாமி” இசைநாயகனுக்கு பிறந்தநாள்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கென ஒரு தனி அங்கீகாரம் உள்ளது. எண்ணிக்கையில் இசையமைப்பாளர்கள் உயர்ந்து கொண்டே சென்றாலும் இசையில் உச்சத்தயும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதும் ஒரு சில இசையமைப்பாளர்கள்தான். அவர்கள் வரிசையில் தனது…

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கென ஒரு தனி அங்கீகாரம் உள்ளது. எண்ணிக்கையில் இசையமைப்பாளர்கள் உயர்ந்து கொண்டே சென்றாலும் இசையில் உச்சத்தயும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதும் ஒரு சில இசையமைப்பாளர்கள்தான். அவர்கள் வரிசையில் தனது இசையமைப்பில் அனைத்து உணர்வுகளிலும் பட்டையை கிளப்பும் ஒருவர், மக்கள் அனைவராலும் “சானா” (SANA) என்ற அடைமொழி கொண்டவர் “சந்தோஷ் நாராயண்” இவரின் பிறந்தநாளான இன்று இவரின் இசைப்பக்கங்களை கொஞ்சம் புரட்டிப்பார்ப்போம்.

திருச்சியை பிறப்பிடமாக கொண்ட இவர் 1983 மே 15 பிறந்தார், பொறியியல் பட்டதாரியான இவர் இசைமேல் இவர் கொண்ட காதலால் ஒளிப்பதிவு பொறியாளராக பணிபுரிந்து வந்தார். பல வருடங்களாக AR ரஹ்மானிடம் பணிபுரிந்து வந்த இவர், இண்டிபெண்டண்ட் இசை நிகழிச்சிகளில் பங்கு கொண்டு இசையமைத்து வந்தார். தமிழ் சினிமாவில் 2012 “அட்டகத்தி” என்னும் திரைப்படம் மூலம் “சானா”-வின் இசைப்பயணம் மக்களிடம் பெரும் வரவேற்புடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து ‘பிஸ்சா’, ‘சூதுகவ்வும்’, ‘குக்கூ’, என இவரை தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவரின் தனித்துவ இசை அனைவரின் கவனத்தயும் ஈர்த்தது, சந்தோஷ் நாராயணன் என்றாலே அவரின் இசைக்கென ரசிகர் பட்டாளமே உண்டானது. இவரது 25 ஆவது இசையமைப்பில் வெளியான வெற்றிமாறனின் “வடசென்னை” -யில் தன் இசையின்மூலம் மிரட்டியிருப்பார், இந்த திரைப்படம் அவரின் இசைப்பயணத்தின் முக்கிய மயில்கல்லாக அமைந்தது. இதன் பின் ரஜினியின் ‘காலா’, ‘கபாலி’ , விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ என்று பல உச்சநட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் வாய்ப்பு இவரை தேடி வந்தது.

“ஆணி போனா ஆவணி” யில் ஆரம்பித்து “மாயநதி இன்று” வரை ஒவ்வொவொரு இசையிலும் தனது தனித்தன்மையை பதிவு செய்ய அவர் ஒரு போதும் தவறியதில்லை. அண்மையில் ஏ.ஆர் .ரஹ்மான் YouTube பக்கத்திற்காக சானா வின் இசையமைப்பில் உருவான “என்ஞாயி எஞ்ஞாமி” இண்டிபெண்டண்ட் பாடல், யூடியுப் தளத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பட்டிதொட்டி முதல் வெளிநாட்டு மக்கள் வரை மக்கள் முணுமுணுக்கும் பாடலாக மாறி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை அவர் 30 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிய இசைக்கும், அவரின் பெயரில் உள்ளது போலவே சந்தோஷ ராகங்களின் சொந்தக்காரரான சந்தோஷ் நாராயணன் ரசிகர்களின் ரசனையறிந்து இசையமைப்பதில் கெட்டிக்காரர். இவரின் இசை மேலும் பல வெற்றியின் உயரத்தை அடைய அவரது படைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. துள்ளல் இசைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.