‘ஹனுமான்’ திரைப்படம் – ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்தில் இருந்து ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதி!

ஹனுமான் திரைப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்தில் இருந்தும் ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதியாக வழங்கப்படும் என்று திரைப்படத்தின் ப்ரீ ரீலிஸ் விழாவில் படக்குழு தெரிவித்துள்ளது. ‘ஹனுமான்’ திரைப்படம் பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்…

ஹனுமான் திரைப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்தில் இருந்தும் ரூ.5 ராமர் கோயிலுக்கு நிதியாக வழங்கப்படும் என்று திரைப்படத்தின் ப்ரீ ரீலிஸ் விழாவில் படக்குழு தெரிவித்துள்ளது.

‘ஹனுமான்’ திரைப்படம் பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ளது. மேலும், ‘ஹனுமான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் திரைப்படமாக வெளியாக உள்ளது.   

இதையும் படியுங்கள் : தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை!

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஹனுமான் திரைப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட்களில் இருந்தும் ரூ.5 ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நிதியாக வழங்க இருப்பதாக ‘ஹனுமான்’ திரைப்படத்தின் ப்ரீ ரீலிஸ் விழாவில் படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்த விழாவில் ஹனுமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக படக்குழுவினர் அனைவரும் காலணி அணியாமல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.