வரும் 28ம் தேதி முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணி எழுத்து தேர்வுக்கான அனுமதிச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III தொகுதி-3A பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 28ம் தேதி முற்பகலில் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளங்களான http://www.tnpsc.gov.in. http://www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.