ரஞ்சி கோப்பை எலைட் குரூப் B பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி, அசாம்
இடையேயான போட்டியில் தமிழ்நாடு அணி அசத்தல் வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை 2022-2023 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, இன்றைய ஆட்டத்தில் அசாம் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 132.3 ஓவர்களில் 540 ரன்கள் எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிகபட்சமாக பிரதோஷ் ரன்ஜன் பால் 153 ரன்கள், நாராயணன் ஜெகதீசன் 125 ரன்கள், விஜய் சங்கர் 112 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய அசாம் அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாலோ ஆன் முறையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.
இரண்டாவது இன்னிங்சில் 204 ரன்களுக்கு மீண்டும் ஆட்டமிழந்ததை அடுத்து, தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசிய தமிழ்நாடு அணியின் அஜித் ராம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.