பாஜக தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் -திருமாவளவன்

பாஜக தலையீடு இல்லாமல் இருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற…

பாஜக தலையீடு இல்லாமல் இருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கூட்டணி கணக்குகளை மறந்து மக்களின் தேவைகள் கோரிக்கைகளின் அடிப்படையில் போராட வேண்டிய நேரங்களில் போராடுகிறோம். சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டு கிரோம் எனத் தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிற கட்சிகள் இணைந்தாலும் திமுக விசிக கூட்டணி மேலும் வலுப்பெறும். பாஜக தலையீட்டுக்கு பிறகுதான் அதிமுக பலவீனமடைந்து வருகிறது. பாஜக தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் என கூறினார்.

பாஜக திட்டமிட்டு சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே பிளவை ஏற்படுத்தி வருவதை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பாஜக தான் என்பதை நிலைநிறுத்திக் கொள்வதை முயல்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.