திமுகவினர் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாக ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

திமுகவினர் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாக காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேவகோட்டை கண்டதேவி…

திமுகவினர் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாக காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தேவகோட்டை கண்டதேவி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பரப்புரையின்போது பேசிய ஹெச்.ராஜா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுகவினர் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் பல நலத்திட்டங்களை பெற்றதாக முதல்வர் காரைக்குடி கூட்டத்தில் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.