குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்த குட்டி பட்டாசு என்ற மியூசிக் ஆல்பம் நேற்று யுடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குக்வித் கொமாளி 2 என்ற ரியலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் இதற்கு முன்பாக ரியோவுடன் நடித்த ’கண்ண வீசி கண்ண வீசி கட்டிப்போடும் காதலி’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். குக் வித் கோமாளியில் பாடகி சிவாங்கி மற்றும் இவரது ஜோடி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவர்கள் ஒரு முக்கிய காரணம். அஸ்வின் நடிப்பில் குட்டி பட்டாசு என்ற மியூசிக் ஆல்பம் நேற்று யுடியூபில் வெளியாகி உள்ளது. 22 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர். மெர்சல் படத்தில் நடித்த ரெபா ஜான் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.







