ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் இருந்து விலகிய நடப்பு சாம்பியன்

2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ்,  டோக்கியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.   2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற  ஒலிம்பிக்கில்…

2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ்,  டோக்கியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

 

2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற  ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் All Around, Vault மற்றும் Floor பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றார். இதே போல், அணி பிரிவிலும் அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்தார்.

All Around பிரிவில் 5 முறையும்,  Floor பிரிவில் 5 முறையும், Balance Beam பிரிவில் 3 முறையும், Vault பிரிவில் 2 முறையும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிமோன் பைல்ஸ்,  உலகின் தலைசிறந்த வீராங்கனையாக கருதப்படுகிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற அணி பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த All Around தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இருந்தும் விலகுவதாக சிமோன் பைல்ஸ் அறிவித்துள்ளார்.

https://twitter.com/Tokyo2020/status/1420268367991083009

தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மன நலன் மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிமோன் பைல்ஸின் முடிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அளித்த ரசிகர்கள், அவர் விரைவில் மீண்டுவர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.