நாமக்கல் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் கடை மற்றும் வீடுகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா ரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் தனிப்படை போலீசார் பாண்டமங்கலத்தில் உள்ள கடை மற்றும் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.








