முக்கியச் செய்திகள் செய்திகள்

முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத்..!

லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்று முதல் அணியாக குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

ஐபிஎல்.இல் புது வரவுகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் நேற்று மோதின. புள்ளிப் பட்டியலில் இந்த அணிகள்தான் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. நேற்று நடைபெற்ற போட்டி பிளே ஆஃப்க்கு எந்த அணி முதலில் செல்லும் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாக இருந்தது. இதனால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த சில போட்டிகளாகவே முதலில் பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெறுகிறது. அந்த வகையில் டாஸை வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இரண்டு அணிகளுமே சில சில மாற்றங்களுடன் களத்தில் இறங்கின. குறிப்பாக குஜராத் அணியில் யாஷ் தயால், மேத்யூ வேர்டு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஸோர் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். அதேபோல, லக்னோ அணியில் கரண் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

லக்னோ அணி சிறப்பாக பவுலிங் போட்டுக் கொண்டிருந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் தடுமாறினாலும் மறுபக்கம் அந்த அணியின் ஓப்பனர் சுப்மன் கில் நிதானமாக நின்று ஆடினார். அதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் மட்டும் 63 ரன் எடுத்தார் இறுதியில் ராகுல் திவேத்தியா அதிரடி காட்டியதால் குஜராத் அணி 144 என்ற ஸ்கோரை எடுத்தது. ஆனால், லக்னோவின் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருப்பதால் எளிதில் சேஸ் செய்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சினால் லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தனர். குஜராஜ் அணிக்கும் ஆரம்பத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனால், அந்த அணியில் சுப்மன் கில் சிறப்பாக ஆடி அணியைக் கரைசேர்த்தார்.  அந்த மாதிரியான இன்னிங்ஸை லக்னோ அணியில் யாருமே ஆடவில்லை. இதனால், லக்னோ அணி 82 ரன்களிலேயே ஆல் அவுட் ஆனாது.

குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் அறிமுகமான முதல் போட்டியிலேயே தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஸோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இந்த சீசனில் குஜராத் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 9ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளனர். சுப்மன் கில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை ஆடிய போட்டிகளில் குஜராத் அணி 3 போட்டியில் மட்டும்தான் தோல்வி அடைந்துள்ளது. களம் இறங்கிய முதல் சீசனிலேயே முதல் அணியாக பிளே ஆஃப்க்கு சென்றுள்ளதை குஜராத் அணியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோசலை செல்லும்: வங்கிகள் விளக்கம்

Jeba Arul Robinson

கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் விபத்தில் படுகாயம்!

Ezhilarasan

நியூஸ் 7 தமிழ் கோரிக்கையை தமிழக அரசு ஏற்பு!