முக்கியச் செய்திகள் உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்து பயிலும் அமெரிக்க மாணவர்கள்

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ளது கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி. 1837ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், 185 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் மாணவியான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்டோனெட் ஷரோன் என்பவர், மாணவ தூதராக அமெரிக்காவில் உள்ளார்.

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பரிமாற்ற மாணவ தூதராக இருக்கும் ஆன்டோனெட் ஷரோன், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள வின்னெகோன் நகரில் நடைபெற்ற வசந்தகால இசை நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாட, அமெரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வீடியோ, தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அரசியலை பெரும் லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றி விட்டார்கள்: சீமான்

Saravana Kumar

’மனசை அமைதிப்படுத்துமாம்…’பசுஞ்சாணத்தை சாப்பிடும் டாக்டர், வைரல் வீடியோ

Halley Karthik

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

Jayapriya