29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத் தேர்தல்; பாஜக வேட்பாளரானார் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி

அடுத்த மாதம் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத்துக்கு எப்போது தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,90,89,765. அதில் 100 வயது கடந்தவர்கள் எண்ணிக்கை 10,460 ஆக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 9,87,999 ஆகவும், முதல்முறை வாக்காளர்கள் 4,61,494 ஆகவும் உள்ளனர். வாக்காளர்களில் ஆண்கள் 2,53,36,610 பேர், பெண்கள் 2,37,51,738, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 1417 ஆவர்.

கடந்த நவம்பர் 3ஆம் தேதி, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், குஜராத்துக்கு டிசம்பர் 1ம் தேதி முதல் கட்ட தேர்தல், 5ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 14 எனவும், வேட்புமனு பரிசீலனை நவம்பர் 15ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனு திரும்பப்பெற கடைசி நாள் நவம்பர் 17 எனவும் அறிவித்தார்.

அதுபோலவே இரண்டாம் கட்டம் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 17, வேட்புமனு பரிசீலனை நவம்பர் 18, வேட்பு மனு திரும்பப்பெற கடைசிநாள் நவம்பர் 21 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 51,782 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் மூத்த பாஜக நிர்வாகிகள் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். அதன்படி மொத்தம் 160 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா சட்டமன்ற தொகுதியில் களம் காண இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ரிவாபா ஜடேஜா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஹரி சிங் சோலங்கியின் குடும்பத்தில் இருந்து ரிவாபா வந்திருந்தாலும் அவர் தற்போது பாஜகவின் அங்கமான “கர்னி சேனாவின்” தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த ஹர்திக் பட்டேலுக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் விரும்காம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading