முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத் தேர்தல்; முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜக வெற்றி

குஜராத் சட்டசபை தேர்தலில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்தது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் 1,92,263 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 157 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக இமாலய வெற்றியை குஜராத்தில் பதிவி செய்துள்ளது.

குஜராத்தில் முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள 17 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டரியாபூர் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள வேட்பாளர் கியாசுதீன் ஷேக், பாஜக வேட்பாளர் கௌசிக் ஜெயினிடம் தோல்வியடைந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யானைகள் வழித்தடத்தில் மேகதாது அணை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

EZHILARASAN D

காலமெல்லாம் காதல் வாழ்க! – கொல்கத்தாவில் நெகிழ்ச்சி சம்பவம்

G SaravanaKumar

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்

Halley Karthik