கடந்த மார்ச்சில் ஜிஎஸ்டி வரி வசூல் 1,24,902 கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த நிதியாண்டில் (2020-2021) முதன் முறையாக மார்ச் மாதத்தில் வரிவசூல் 1,24,902 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதக்காலமாக ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கொடியை கடந்துள்ளது.

இதன் காரணமாக ரூ.21,879 கோடியை மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.17,230 கோடியை மாநில ஜிஎஸ்டி வரியாகவும் அரசு செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.28,000 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வசூலை பொறுத்த அளவில், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,973 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.29,329 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.62,842 கோடியாக வசூலாகியுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஏப்ரலில் ஜிஎஸ்டி வரி வசூல் 32,172 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







