அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் அதிமுகவில் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பல அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக மதுரை விமான நிலைய சாலையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டம் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பது புரியாத அளவில் நடந்து முடிந்தது. அடுத்த பொதுக்குழு கூடும்போது இபிஎஸ்-தான் ஒற்றைத்தலையை ஏற்பார் எனச் சிலர் கூறிவந்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் டெல்லி சென்றுவந்த பின்னர் இன்று மதுரை செல்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மதுரை வில்லாபுரத்திலிருந்து விமான நிலையம் செல்லும் பாதையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகப் பல அதிமுக நிர்வாகிகள் சாலை எங்கும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு, புதுவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு’
மேலும், மதுரை வரும் ஓபிஎஸ்க்கு, விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத், ராஜ்ய சபா உறுப்பினர் முதுகுளத்தூர் தர்மர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷணன், ராமநாதபுரம் மாவட்ட மகளிரணி செயலாளர் சக்தி வழிவிட்டாள், RS மங்களம் ஒன்றிய செயலாளர் நந்திவர்மன், தேனி மாவட்டத்தில் முன்னாள் M.P. சையதுகான், மதுரை கிழக்கு மாவட்டம், மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஓபிஎஸ்-யை விமான நிலையத்தில் வரவேற்க குவிந்துள்ளனர்.
நடந்து முடிந்த பொதுக் குழுவிற்குப் பிறகு ஓபிஎஸ்-க்கு தென்மாவட்டங்களில் ஆதரவு பெருகுவதாக அதிமுக கட்சி வட்டாரங்கள் இடையே ஒரு கருத்து நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மதுரையைத் தொடர்ந்து அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களின் மனநிலையை அறியத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.