தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை பழக்கத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களக்கு முன கல்லூரியில் போதை பொருளை சாக்கெலெட் வடிவில் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள்கள் பழக்கம் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்ககைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை பொருள் கலாசராத்திற்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வரும் 30ம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போதைக் கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்து கொண்டிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதன் மூலமாக மட்டுமே போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் கல்வி நிறுவன பகுதிகளில் தான் போதைப்பொருள் அதிகம் விற்பனையாகிறது.
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் ஒருவர் தடை செய்யப்பட்ட போதை ஊசிகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், உடல்நலம் பாதிக்ப்பட்டு சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். போதைக்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் மிகக்குறைந்த வயதிலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








